அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, May 3, 2011

குட்ஷேபெர்ட் பள்ளிகூட குழந்தைகளை ஏற்றி வந்த வேன் விபத்து

காரைக்காலில் இன்று  (03.05.2011)  குட்ஷேபெர்ட்  பள்ளிகூட  குழந்தைகளை  ஏற்றி வந்த வேன்  விபத்துக்குள்ளாகி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைந்த குழந்தைகள் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்  விபத்துக்குள்ளான  குழந்தைகளை த.மு.மு.க  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஷேக் அலாவுதீன்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் A.லியாக்கத் அலி, மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான்,  மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் E.சபுருதீன், ம.ம.க இளைஞர் அணி செயலாளர் M.நைனா முஹமது, ம.ம.க நகர தலைவர் H.சிக்கந்தர், த.மு.மு.க நகர செயலாளர் M.நஜிமுதீன் ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். உடனடியாக த.மு.மு.க  ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டது. படுகாயமடைந்த ௨ குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக பாண்டிசேரி கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள்  நலனை  கருத்தில் கொண்டு  ஆம்புலன்சில்  நர்ஸ் செல்ல வேண்டுமென த.மு.மு.க கோரிக்கை  வைக்க   மருத்துவமணை  R.M.O  முடியாது  என்று  கூறியதால்  த.மு.மு.க வினர்  போராட்டத்திற்கு தயாராகினர், உடனடியாக  காவல்துரை   S.S.P  தலையிட்டு  ஆம்புலன்சில் நர்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP