அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, May 14, 2011

காரைக்காலி​ல் மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றி ஊர்வலம்

தமிழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே. ஒரு சிறுபான்மை கட்சி சொந்த சின்னத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றியை தொடர்ந்து காரைக்கால் நகர  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் தொண்டர்கள்  தங்களுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வண்ணம் காரைக்கால் முக்கிய சாலைகளில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றும், அனைவர்க்கும் இனிப்பு வழங்கியும்  தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP