காரைக்கால் அரசு சுகாதார நிலையத்தின் அவல நிலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்ககூடிய வசதிகள் கூட இல்லாத மிகவும் மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டுயிருக்கிறது. விபத்துக்கள் நடக்கும் போது கூட சரியாக கவணிப்பதற்கு கூட உரிய மருத்துவர்கள் இங்கு இல்லாமல் காரைக்காலில் இருந்து 140 கி.மி தூரத்தில் இருக்கும் தஞ்சாவூர், பாண்டிச்சேரி போன்ற ஊர்களுக்கு எடுத்து செல்லகூடிய அவல நிலை உருவாகி இருக்கிறது. இதை கண்டித்து பல தரப்பட்ட போராட்டங்கள் த.மு.மு.க வினர் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் இந்த புதுச்சேரி அரசோ அல்லது அரசியல் வாதிகளோ சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், தலைமையில் 18-06-2011 அன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களால் முற்றுகை இடப்பட்டது. அதை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் அசோக் குமார் அவர்கள் த.மு.மு.க நிர்வாகிகளிடம் பேச்சிவார்த்தை நடத்தினார். அப்பொழுது இப்பிரச்சனைக்கு இன்னும் மூன்று நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அதை தொடர்த்து முற்றுகை போராட்டம் விளக்கிகொள்ளப்பட்டது.