அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, July 9, 2011

டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நூதன போராட்டம்


அறிவிக்கப்படாத ஒரு பொருளாதார நெருக்கடியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல் படுத்தியிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகியிருகிறார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காகவே டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருகிறது மத்திய அரசு.

எட்டு விதமான வரிகள் விதிக்கப்பட்டு அதிகமான விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம்.

அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி எண்ணெய் நிருவனங்களை நாட்டுடைமையாக்கினார்.

ஏற்கனவே, கடந்த ஐந்து வருடங்களாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏலை, நடுத்தர குடும்பங்கள் இதனால் மேலும் பாதிப்படைய உள்ளனர். மத்திய 
அரசு இந்த விலை உயர்வு திரும்ப பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விறகு அடுப்பு எரிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. 



இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் A.லியாகத் அலி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான்ஆகியோர் முன்னிலை வகித்தனர், த.மு.மு.க மாநில உலமா அணி செயலாளர் யூசுப் S.P, த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம். ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.நெய்னா முகமது, ம.ம.க தொழிற்ச் சங்க செயலாளர் H.M. இக்பால், த.மு.மு.க மாவட்ட மருத்துவ அணி செயலாளர் M.முஹமது ஜியாவுதீன் , த.மு.மு.க மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், நகர தலைவர் H.முஹமது சிகந்தர் , த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன், நகர பொருளாளர் H.ஹசனுதீன், நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் A.அக்பர்ஷா நன்றி கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP