காரைக்கால் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி
காரைக்கால் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 07.01.2012 அன்று காரைக்கால் P.S.R கூட்ட வளாஹத்தில் மமக மாநில துணை பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்ததார். நிர்வாகிகள் செயல்பாடு பற்றி மாநில உலமா அணி செயலாளர் S.P.யூசுப் அவர்கள் உரையாற்றினார், மாவட்ட பொருளாளர் வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார், எதிர்கால செயல் திட்டங்கள் பற்றி மாநில துணை பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் விவரித்தார். இப்பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதன முடிவு செய்யப்பட்டது. பின்னர் புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தமுமுக மற்றும் மமக தலைவராக I.அப்துல் ரஹீம், தமுமுக செயலாளராக M.முஹமது நஜிமுதீன், மமக செயலாளராக M.நைனா முஹமது, தமுமுக மற்றும் மமக பொருளாளராக S.யூசுப்கான், துணை தலைவராக A.ஹாஜா நஜிமுதீன், தமுமுக துணை செயலாளர்களாக K.மெய்தீன், H.அப்துல் காசிம், மமக துணை செயலாளர்களாக A.அப்துல் நாசர், M.R.சாதிக் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
த.மு.மு.க - தீர்மானங்கள்
1. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும்.மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள். இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது. ஆனால் இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென பரிந்துரைச் செய்தது. ஆனால் தற்போது மத்திய அரசு மிஸ்ரா ஆணையத்தின் இந்த இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது. இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இத்தகைய இடஒதுக்கீட்டினால் எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மிஸ்ரா ஆணையம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும் மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மிஸ்ரா ஆணையம் பரிந்துரையின்படி 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
2. திருபட்டினம் கொம்யூன் மேல வாஞ்சூர் பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்காக உள்ள ஹஜ்ரத் செய்யது அலிஷா தர்கா இடத்தில் உள்ள மையவாடிக்கு சுற்று சுவர் இல்லாததால், அந்த மையவாடிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து சுற்று சுவர் அமைத்து தருமாறு சட்டமன்ற உறுப்பினர் V.M.C.சிவகுமார் அவர்களை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
3. புதுச்சேரி அரசு வக்பு வாரிய தலைவர் பதவி பல வருடங்களாக நிரப்பபடாமல் உள்ளதால் இஸ்லாமிய சொத்துக்கள் பராமரிப்பு இல்லாமல் இஸ்லாமிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வக்பு வாரிய தலைவர் மற்றும் காரைக்கால் நகர காஜியார் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என புதுச்சேரி அரசை என இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது .
4. காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்கம் ஆரம்பிக்கப்பட்டதே இஸ்லாமிய மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே. ஆனால் சமீப காலமாக மு.வி.ச பள்ளியின் கல்வி தரம் குறைந்து கொண்டே வருகிறது. ஆசிரியர் பணி இடங்களும் காலியாக உள்ளன, காலியான இடங்களை நிரப்ப நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களுக்கு தற்பொழுது ஆங்கில வழி கல்வி கூடத்தில் தற்காலிகமாக உள்ள ஆசிரியைகளை கொண்டு சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும். மேலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நிர்வாகத்தை என இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
5. காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள தலித் மக்களின் கருமாதி மண்டப பிரச்சனை அரசுக்கும் ஒரு தனி மனிதருக்கும் உள்ள பிரச்சனை, இந்த பிரச்சனையை மதத்தோடு சம்பந்தபடுத்தி காரைக்காலில் மத கலவரத்தை உருவாக்க முயற்ச்சிக்கும் மதவாத சக்திகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
ம.ம.க - தீர்மானங்கள்
1. சமீபத்தில் ஏற்பட்ட தானே புயலால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலங்கள் மற்றும் பொது சொத்துக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புதுச்சேரியில் வழங்குவது போல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மேலும் அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
2. புதுச்சேரி அரசு அறிவித்துள்ள வாட் வரி விதிப்பினால் மக்கள் பயன் படுத்தும் பல பொருட்களின் விலைகள் ஏற்றப்பட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே மக்கள் பயன்பாட்டிற்கு உரிய பொருட்களின் மீது போடப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு அரசை கேட்டு கொள்கிறது.
3. ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை மஞ்சள் நிற ரேசன் கார்டு வைத்திருக்கும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் அமல்படுத்த வேண்டும், புதுச்சேரி அரசு அறிவித்தபடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காரைக்காலில் உடனடியாக அமைக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும் என புதுச்சேரி அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
4. புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றி வந்த சுமார் 4000 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்வதாக முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு செய்தும் இதுவரை அந்த ஊழியர்கள் பணியில் சேர்க்கப்படாமல் உள்ளனர் . எனவே முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தபடி 4000 ஊழியர்களையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என இப்பொதுக்குழு அரசை கேட்டு கொள்கிறது.
5. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுபவர்கள் அதனால் அவர்களுக்கு ஒரு மாத சம்பளம் கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது, கடந்த சில வருடங்களாக அந்த ஒரு மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது, அதுபோல் தேர்தல் நேரத்தில் பணியாற்றிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தேர்தலில் பணியாற்றிய சம்பளம் வழங்கப்பட்டு விட்டது, ஆனால் காவலர்களுக்கு மட்டும் தேர்தல் சம்பளமும் வழங்கபடாமல் உள்ளதை இப்பொதுக்குழு கண்டிப்பதுடன், உடனடியாக காவலர்களுக்கு ஒரு மாத சம்பளமும், தேர்தல் சம்பளமும் வழங்க வேண்டும் என அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
6. காரைக்கால் - நாகூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்பொழுது சென்னை மற்றும் எர்ணாகுளம் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிலைய பணிகளை முழுமையாக முடித்து திருச்சியிலிருந்து நாகூர் வரை வரும் ரயில்களை காரைக்கால் வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது
7. காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் காரைக்காலுக்கு நூற்றுகனக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் கருக்கங்குடி வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டும் சென்று வருகிறது, சமீபகாலமாக தமிழக அரசு பேருந்து ஒன்று மக்களின் பல்வேறு கட்ட போராட்டத்திற்குப்பின் விடப்பட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு கருக்கங்குடி வழியாக PRTC பேருந்து ஒன்று இயக்க ஆணை பிறப்பித்தும் இன்று வரை அந்த பேருந்து இயக்கப்படவில்லை, எனவே உடனடியாக PRTC பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுபோல் கருக்கங்குடியில் உள்ள பேருந்து நிறுத்த பஸ் நிலைய நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மையம் பழுதடைந்து எந்த நேரமும் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள பஸ் நிலைய நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மையத்தை புதிதாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது. .