திருநள்ளாரில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு
திருநள்ளாரில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
திருநள்ளார் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது, மமக மாவட்ட செயலாளர் நெய்னா முகமது, தமுமுக மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது ஹூசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் திருநள்ளார் கிளை தலைவராக நூருல் அமீன், மமக கிளை செயலாளராக அவுலியா முகமது, தமுமுக கிளை செயலாளராக முகமது பைசல், கிளை பொருளாளராக அஸாருதீன், துணை தலைவராக ஷேக் முகமது, கிளை மமக துணை செயலாளர் ராஜ முகமது, தமுமுக துணை செயலாளர் முகமது பைசல், கிளை மாணவரணி செயலாளர் முகமது சமீர், தொண்டரணி செயலாளர் அமீர் மாலிக், இளைஞர் அணி செயலாளர் சதாம் ஹூசைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.