நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹமது காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிவதால் மக்கள் சாலைகளில் திரிவதற்கு அச்ச்சப்பட்டும், வாகனத்தில் செல்பவர்கள் பயந்து கொண்டு செல்வதும் தினந்தோறும் வாடிக்கையாகி விட்டது. இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்களால் துரத்தப்பட்டு ஓடுவது பரிதாபமாக உள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியராகிய தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து காரைக்கால் மாவட்டம் முழுவதும் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சயாத்களிலும் நாய்களை பிடிக்க ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.