அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, June 14, 2012

முஸ்லிம் வித்தியா சங்க உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் (PIC) வழங்க வேண்டும்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.முஹமது நஜிமுதீன் மாவட்ட துணை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில்கூறியிருப்பதாவது:                                                                                                           பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் அலைச்சளில்லாமல் குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி மற்றும் வருவாய் சான்றிதழ்கள் வாங்கும் பொருட்டு கடந்த சில வருடங்களாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி மற்றும் வருவாய் சான்றிதழ் உள்ளடக்கிய நிரந்தர சான்றிதழ் (PIC) வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அலைச்சளில்லாமல் PIC சான்றிதழை வைத்து மேற்படிப்புக்கு சென்றனர். ஆனால் சென்ற வருடம் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு PIC சான்றிதழ் வழங்கப்படவில்லை. குறிப்பாக காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

ஆகவே, தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் PIC சான்றிதழ் வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP