காரைக்காலில் சுற்றி திரிந்த இரண்டு சிறுவர்களை த.மு.மு.க மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் நகர் பகுதியில் சந்தேகத்திற்குரியவகையில் சுற்றி திரிந்த இரண்டு முஸ்லிம் சிறுவர்களை காரைக்கால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருப்பதாக த.மு.மு.க விற்கு வந்த தகவலின் அடிப்படையில் த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், நகர தலைவர் ஜெகபர் சாதிக், த.மு.மு.க நகர துணை செயலாளர் புஹாரி ஆகியோர் உடனடியாக காவல் நிலையம் சென்று அந்த இரண்டு சிறுவர்களையும் விசாரித்தனர், அந்த சிறுவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த கலிபதுல்லஹ் என்றும் மற்றொருவர் ஆம்புரை சேர்ந்த அக்பர் அலி என்றும் அவர்கள் இருவரும் ஆம்பூரில் உள்ள ஒரு மதரசாவில் பயின்று வருவதாகவும், ஆசிரியர் திட்டியதால் மூன்று தினங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு ஓடி வந்ததாகவும் தெரிவித்தனர், மூன்று தினங்கள் சாப்பிடாமல் பசியுடன் இருப்பதாக தெரிவித்தனர், அவர்களுக்கு உணவு கொடுத்து விட்டு, காவல் நிலையத்திலிருந்தவாறே மனிதநேய மக்கள் கட்சி ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த செய்தியை கூறி ஆம்பூர் மதரசாவில் விசாரிக்க வேண்டுமென் மாவட்ட செயலாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்களும் மதரசாவில் விசாரித்து அந்த சிறுவர்கள் மதரசாவில் படிப்பதை உறுதிப்படுத்தினார், அதனை தொடர்ந்து அந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அந்த இரண்டு சிறுவர்களும் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். அந்த பெற்றோர்கள் த.மு.மு.க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.