காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி - மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 13.04.2013 சனிக்கிழமை இரவு காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியில் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நகர தலைவர் S.K.ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் அப்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட தலைவர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட பொருளாளர் எஸ். ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் H.அப்துல் காசிம், M.முஹமது நஜிமுதீன், நகர பொருளாளர் சபுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில இணை பொது செயலாளர் எஸ்.எஸ்.ஹரூன் ரஷீது, மாநில செயலாளர் கோவை செய்யது, மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் ஹசனுதீன் நன்றி உரை நிகழ்த்தினார். இப்பொதுகூட்டதில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் A. முஹம்மது ரியாஸ், தொண்டரணி செயலாளர் A. முஹமது ஜியாவுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், மற்றும் ஏரளாமான பெண்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை த.மு.மு.க நகர செயலாளர் சிக்கந்தர், நகர துணை தலைவர் ஹமீது மரைக்கார், த.மு.மு.க நகர துணை செயலாளர்கள் புஹாரி, முஹம்மது ஷெரிப், நகர துணை செயலாளர் முஹம்மது யாசின், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், கிளை செயலாளர் அக்பர் அலி, கிளை பொருளாளர் சதாம் ஹுசைன், கிளை துணை தலைவர் முஹம்மது பாசித், கிழக்கு கிளை தலைவர் செய்யது ஆரிப் ஷேக் அலாவுதீன், கிளை பொருளாளர் முஹம்மது சம்சுதீன், உட்பட கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இப்பொதுக்கூட்டதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இந்த தீர்மானகள் மீது மத்திய, புதுச்சேரி மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. 



புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்
1. புதுச்சேரி மாநிலம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் புதுச்சேரி மாநிலத்தை ஆக்கிரமித்து, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்களை குடிக்கு அடிமையாக்கி பல குடும்பங்களை வீதியில் நிறுத்திய மதுவை புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக தடை செய்து, புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
2. புதுச்சேரிக்கு மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது, ஆனால் அந்த தீர்மானம் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவல் இதுவரை புதுச்சேரி அரசிடமிருந்து வெளியிடப்படவில்லை. ஆகவே தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலுப்படுத்த புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தனி மாநில அந்தஸ்திற்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்
3. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு, பட்டினச்சேரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேர் கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். தமிழக மற்றும் காரைக்காலை மீனவர்கள் கைது செய்யப்படுவதும் சித்திரவதைக்குல்லாக்கப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. கேரளத்தை சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலி கப்பல் பணியாளர்களால் கொல்லப்பட்ட போது, இந்திய அரசு, அந்நாட்டு கப்பல் பணியாளர்களை வரவழைத்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியது. கேரள மீனவர்களுக்கு காட்டும் ஆர்வத்தில் ஒரு சதம் கூட தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது மத்திய அரசு காட்டுவதில்லை. இனியாவது மத்திய அரசு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
2011-12 புதுச்சேரி மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும்
4. புதுச்சேரி மாநில 2011-12 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் பகுதிக்குரிய பல்வேறு திட்டங்களான நேரு மார்க்கெட்டை இடித்து விட்டு புதிய அங்காடி கட்டுதல், காரைக்காலில் அரசு பொது மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், காரைக்கால் நகர பகுதியில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவைகளை மாற்றி நகர் முழுவதும் புதிய குடிநீர்குழாய்கள் அமைத்தல், புதுத்துறை அருகில் ஆற்று நீரை சுத்தபடுத்தி குடிநீர் வழங்குதல், திருபட்டினம் போலகத்தில் வேதிப்பொருள் மற்றும் வாயு தீயணைப்பு வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றை இனியும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
தனியார் கல்விக்கூட கட்டணத்தை முறைபடுத்த வேண்டும்
5. புதுவை மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகமாக இருந்து வருகிறது. ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலையில் வருவோம் என்ற நம்பிக்கையில் பல சிரமத்துக்கு இடையே பள்ளிகளில் சேருகிறார்கள். இதை பல தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மாத கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பல்வேறு கட்டணங்களை கட்ட வேண்டும் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார் கல்வி கட்டண விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பள்ளி திறக்கப்படும்போதே கொடுக்க வேண்டும்
6. புதுச்சேரி மாநிலத்திற்கு என தனியாக கல்வி வாரியம் இல்லாததால் அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள கல்வி முறையை பின்பற்றியே புதுச்சேரி மாநிலத்திலும் கல்வி முறை செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு உண்டான புத்தகங்கள் தமிழகத்திலிருந்தே புதுச்சேரிக்கு வருகிறது, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மானவர்களுக்கு சரியான நேரத்தில் புத்தகங்கள் கொடுக்கப்படாததால் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் ஆசிரியர்களால் பாடத்தை நடத்த முடியாமலும், மாணவர்களும் தேர்வுக்கு சரியாக பாடத்தை படிக்க முடியாமலும் பொய் விட்டது, இதனால் மாணவர்களின் கல்வி தரம் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே, எதிர்வரும் கல்வி ஆண்டிற்கு உண்டான பாட புத்தகத்தை பள்ளி தொடங்குவதற்கு முன்பே மாணவர்களுக்கு கொடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்
7. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தபடி கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் உறுப்பினர்களால் பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டி மற்றும் அபராத வட்டிகளை தள்ளுபடி செய்யவும், மேலும் குறைந்த வருவாய் பிரிவினர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெறப்பட்ட தவணை கடந்த அசலை 1 லட்சம் வரை தள்ளுபடி செய்வதற்கு உண்டான அறிவிப்பினை நடைமுறைப்படுத்த அரசானை வெளியிட வேண்டும் என புதுவை முதல்வர் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்
8. காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும், அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே இருக்கின்ற காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
காரை நகரப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும், நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும்
9. காரைக்கால் நகர பகுதி சமீபகாலமாக சுத்தம் செய்யப்படாமல் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் நிறைந்து தெருக்கள் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது, அதுபோல் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் சாக்கடைகளில் குப்பைகள் நிறைந்து கழிவு நீர் ஓடாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாகி மக்கள் வியாதிகளில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் நாய்கள் பெருக்கம் அதிகமாகி தெருக்களில் மக்களும், மாணவர்களும் சாலைகளில் நடமாட முடியவில்லை மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் நாய் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே மக்கள் நலனில் அக்கறைகொண்டு சாலைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தும், சாலைகளில் திரியும் நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும் என புதுச்சேரி அரசையும், காரைக்கால் நகராட்சியையும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்
10. சிகப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதுச்சேரி அரசு அமல்படுத்திவரும் ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை அதே ஏழ்மை நிலையில் உள்ள மஞ்சள் நிற ரேசன் கார்டு வைத்திருக்கும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
புறம்போக்கு இடங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
11. காரைக்காலில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும் மற்றும் தூர்வாரப்படாமலும் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் நகருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது. அதுபோல் காரைக்கால் நகர பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள், நடைபாதைகள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கட்டிடமும் கட்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், காரைக்கால் நகராட்சியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்கள், அரசு நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
GLR மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும்
12. வீடுகள், மனைகள் ஆகியவற்றிற்கு உண்டான GLR மதிப்பு கூட்டு வரியை கடந்த ஆண்டு 100 சதிவிகிதம் வரை காரைக்கால் மாவட்டத்திற்கு மட்டும் புதுச்சேரி அரசு உயர்த்தியது, இதனால் நடுத்தர மக்கள், ஏழை எழிய மக்கள் தங்களுக்கு என்று ஒரு சிறிய இடம் கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்களை பற்றி சிந்திக்காமலேயே இந்த அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். எனவே காரைக்கால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பு கூட்டு வரியை சென்ற ஆண்டை பலமடங்கு குறைத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
பட்டா மாற்றம் செய்வதில் முறைகேடு அலைகழிப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
13. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வீடுகள், நஞ்சை, புஞ்சைகளை பட்டா மாற்றம் செய்வதற்காக காரைக்கால் வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்த நூற்றுக்கணக்கான மனுக்கள் ஒரு வருடங்களுக்கு மேலாக பெயர் மாற்றம் செய்யப்படாமலும், நடவடிக்கை எடுக்கப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பட்டா மாற்றம் சம்பந்தமான மனு மீது நடவடிக்கை எடுக்க ஆயிர கணக்கிலும், லட்ச கணக்கிலும் பணம் கேட்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் முழு அக்கறை செலுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
சாலைகள் செப்பனிடப்பட வேண்டும்
14. காரைக்கால் நகர பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த பல வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஆகவே புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து சாலைகளையும் புதுப்பிக்கவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நகர்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
மெய்தீன் பள்ளி குளம் தூர்வாரப்பட வேண்டும்
15. காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ள மெய்தீன் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் உள்ள குளம் சுற்றிலும் உள்ள கடை மற்றும் வீடுகளால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்பொழுது அந்த குளம் சுருங்கி பொய் விட்டது. எனவே காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அந்த குலத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த குலத்தை தூர் வாரி மக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
காரைக்காலுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
16. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட காரைக்கால் - வேளாங்கண்ணி ரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலிலிருந்து இயங்க ஆரம்பித்தது, ஆனால் அதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட காரைக்கால் - திருச்சி ரயிலின் ஒரு ரயிலான காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால் - திருச்சி ரயில் இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது காரைக்கால் - பெங்களூர் பாசஞ்சர் ரயில், காரைக்கால் - மும்பை விரைவு ரயில்கள் காரைக்காலில் இருந்து இயக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ரயில்களையும் உடனடியாக காரைக்காலில் இருந்து இயக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
சாராயக்கடை குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்
17. காரைக்கால் புதுத்துறை பாலம் இறக்கத்தில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது. மக்கள் நடமாட்டமும் அதிகமாகி வருகிறது. எனவே குடியிருப்புக்கு அருகில் ஆற்று ஓரத்தில் சாராயக்கடை இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், அப்பகுதியில் குடித்து விட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது. ஆகவே, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அந்த சாராயக்கடை குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்க தடை விதிக்க வேண்டும்
18. காரைக்கால் வாஞ்சூரில் இயங்கி வரும் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கப்பட்டு அவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. நிலக்கரியினால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேன்சர் நோய் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக அறிய வருகிறது. எனவே, மார்க் துறைமுகத்தில் நிலக்கரிகளை இறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.