காரைக்கால் தாலுக்க அலுவலகம் முழுவதும் CCTV கேமரா பொறுத்த வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 19.04.2013 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.அலாவுதீன், அப்துல் ரஹீம், H.அப்துல் காசிம், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் A. முஹம்மது ரியாஸ், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது மெய்தீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது ஹுசேன் சாதிக், மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் M. முஹமது ஜியாவுதீன், மனிதநேய வர்த்தக சங்க மாவட்ட பொருளாளர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாக குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இந்த தீர்மானங்கள் மீது புதுச்சேரி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீர்மானங்கள்
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்
1. புதுச்சேரி அரசின் தவறான கொள்கைகளால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வால் மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. இந்நிலையில், மின்கட்டணத்தை 50 விழுக்காட்டுக்கு மேல் அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது, இந்த மின்கட்டண உயர்வால் மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு ரூ.350 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையை உயர்த்தியதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
காரைக்கால் தாலுக்க அலுவலகம் முழுவதும் CCTV கேமரா பொறுத்த வேண்டும்
2. அரசு அலுவலங்கங்களில் நடைபெறும் பணிகளை கண்காணிப்பதர்காக CCTV கேமரா புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்டு வருகிறது, அதன் அடிப்படையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் CCTV கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தற்பொழுது வருவாய் அலுவலகத்தில் உள்ள துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CCTV கேமரா பொருத்தப்பட்டு ஊழியர்களின் பணிகளும், பனி நிமித்தமாக வருபவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள், இந்த செயலை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பதுடன், அதே வேளையில் முக்கியமாக காரைக்கால் தாலுக்கா அலுவலகம் தான் கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு நாளைக்கு 100 பேர் வரை மட்டுமே துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகிறார்கள், ஆனால் தாலுக்கா அலுவலத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 பேருக்கு மேல் வருகிறார்கள். மேலும் பட்டா பெயர் மாற்றம் நடைபெறும் செட்டில்மெண்ட் பிரிவு, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பிரிவு குறிப்பாக தாசில்தார் அரை போன்றவற்றில் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காநிக்கப்பட்டால் தாலுக்கா அலுவலகத்திற்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதும், காலதாமதம் செய்வதும் குறையும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காரைக்கால் தாலுக்க அலுவலகம் முழுவதும் CCTV கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.