காரைக்காலில் காவல்துறை உதவியுடன் பிஜேபி யினர் கலவர முயற்சி - முஸ்லிம்கள் கொந்தளிப்பு - பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சேலத்தில் பிஜேபி பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 22.07.2013 அன்று பிஜேபி யினர் அறிவித்துள்ள கதவடைப்பின் போது பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க புதுச்சேரி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கும், காவல்துறைக்கும் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. அதுபோல் காரைக்கால் வணிகர் சங்கமும் கடைகளை திறந்தாள் பாதுக்காப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு கோரிக்கை வைத்தது. அதற்கு காவல்துறை சார்பாக வழக்கம்போல் திறந்திருக்கும் கடைகளை போராட்டக்காரர்கள்
வற்புறுத்தி அடைக்கச்சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாதிக்கும் வகையில் போக்குவரத்தை யாரும் தடை செய்யக்கூடாது. பந்த் போராட்டத்தையொட்டி வன்முறை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீஸ் பாதுகாப்போடு பஸ்கள் இயக்கப்படும். என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக வழக்கம் போல் கடைகளை திறந்த கடைகளை மூடக்கோரி பா.ஜ.க மாநில செயலாளர் அருள்முருகன் தலைமையில் ஒரு கும்பல் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியும், மிரட்டியும் வந்தது. இதனை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததால், வணிகர்களும் பயந்துகொண்டு கடைகளை மூடினார்கள். தொடர்ச்சியாக கடைகளை மூடசொல்லி வந்தவர்கள்
காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள ஒரு கடையை மூடசொல்லி
வற்புறுத்தினர், கடைகாரரும் ஒரு ஆர்டர் வந்துள்ளதால் கொடுத்துவிட்டு
கடையை மூடி விடுகிறேன் என்று கூறி உள்ளார், ஆனால், அருள்முருகன்
தலைமையில் வந்த கும்பல் கையில் வைத்திருந்த கம்பிகளால் கடை கண்ணாடிகளை உடைத்ததுடன், கடையில் இருந்த ஹாஜா என்ற ஊழியரையும் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கியதாக தெரிய வருகிறது, தாக்கப்பட்ட ஹாஜா தற்பொழுது காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், செய்தி கேள்விப்பட்டு அங்கு கூட்டம் கூடியது, கூட்டத்தில் இருந்தவர்கள் ஹாஜாவையும், கடையையும் தாக்கிய அருள்முருகன் மற்றும் பிஜேபி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். கடைகளை பாதுக்காக்க காவல்துறையினர் இல்லை என்ற நிலையில்
பிஜேபி க்கு எதிராக மக்கள் திரள்வதை பொறுக்க முடியாத நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிந்தனர், அங்கு வந்த காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கடசாமி அங்கு கூடியிருந்த முஸ்லிம்களை பார்த்து முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் உங்களால் பாம் தானே வைக்க முடியும், முடிந்தால் பாண்டிச்சேரியில் பாம் வையுங்கள் என்று தான் ஒரு அரசு அதிகாரி என்பதைகூட மறந்து விட்டு காவிகளின் தலைவர் போல பேசியுள்ளார். இதனால் கொதித்து போன முஸ்லிம்கள் பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் காட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆப் இந்தியா, முத்தவல்லிகள், பெரியப்பள்ளி, மெய்தீன் பள்ளி, ஹிளுறு பள்ளி மற்றும் காரைக்கால் பகுதி அனைத்து ஜமாத்தார்கள் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை ஏற்ப்படுத்தி அதன் மூலம்
இந்த பிரச்சனையை கையாள்வது என்று முடிவு செய்தனர். இதனிடையே, முஸ்லிம்கள் ஒன்று கூடுவதை அறிந்த மாவட்ட காவல்துறை முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளருடன் பெரியபள்ளியில் உள்ள வக்பு நிர்வாக சபை அலுவலகத்திற்கு வருகை தந்து அமைப்பின் நிர்வாகிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது நிர்வாகிகள் கடையை உடைத்து, ஹாஜா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அருள்முருகன் மற்றும் அவருடன் வந்த கும்பலை கைது செய்ய வேண்டும், முஸ்லிம்களை தீவீரவாதிகள் என்றும், பாம் வைப்பவர்கள் என்றும் கூறிய காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கடசாமி பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், கோரிக்கையை ஏற்காமல் பிரச்சனையை இதோடு முடித்து விடுங்கள் என்று கூறி சென்று விட்டார் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் . இதனால் சமாதானம் ஆகாத முஸ்லிம்கள் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலிலிருந்து பேரணியாக
புறப்பட்டு மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவெடுத்தனர். காவி பயங்கரவாதி அருள்முருகனை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் காவிகளின் தலைவனைபோல் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கடசாமியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை எடுத்து கொண்டு சுமார் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பெரிய பள்ளியிளுருந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மாளிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட
மாவட்ட ஆட்சியர் அவர்கள் "அருள்முருகனை கைது செய்து விட்டோம், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளரிடம் நிகழ்வுகளை கேட்டு 2 தினங்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரிலும், வரும் 25.07.2013 அன்று மீண்டும் கூட்டமைப்பினருடன் பேசுவதாகவும் கூறியதை அடுத்து, கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று கூட்டம் கலைந்தது.
இதனிடையே, 23.07.2013 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமாதான
கமிட்டி கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மா தலைமையில்
நடைபெற்றது, இக்கூட்டத்தில் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர்,
காவல்துறை கண்காணிப்பாளர், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், தமுமுக சார்பாக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், TNTJ சார்பாக மாவட்ட செயலாளர் சுல்தான் அப்துல் காதர், PFI சார்பாக பாட்சா, SDPI சார்பாக சுல்தான், பெரியபள்ளி ஜமாஅத் சார்பாக அல்லாக்குட்டி, BJP சார்பாக இளங்கோவன் மற்றும் 4 நபர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய அமைப்பினரை அழைத்து தனியாகவும், பிஜேபி தரப்பினரை அழைத்து தனியாகவும் மாவட்ட ஆட்சியர் பேசினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், கடை உடைப்பு, ஹாஜா என்பவரை தாக்கியது தொடர்பாக பிஜேபி யை சேர்ந்த பிஜேபி மாநில செயலாளர் அருள்முருகன் உட்பட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்த 4 நபர்களையும் கைது
செய்திருப்பதாகவும், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், சட்டமன்ற கூட்ட தொடர் முடிவடைந்ததும் இந்த மாத இறுதியில் அவர் பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் கூறி, காரைக்கால் அமைதியான பகுதி, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் சகோதர ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இந்நிலை தொடரவேண்டும் எனதுதான் அரசின் என்ணம். நேற்று நடந்த சம்பவம் இனி ஏற்படாமலிருக்க இரு அமைப்பினரும் சமாதானமாகுங்கள் என்று கூறினார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆன்டோ
அல்போன்ஸ் ஆகியோரிடம் இரு அமைப்பினரும், இனி காரைக்காலில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது என உறுதி அளித்தனர்.