புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இப்தார் நிகழ்ச்சி - தமுமுக நிர்வாகிகள் பங்கேற்பு
புதுச்சேரி மாநில ஆளுநர் அவர்கள் சார்பாக வருடந்தோறும் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சி 23.07.2013 அன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியா தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ரெங்கசாமி, மாநில அமைச்சர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக காரைக்கால் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, புதுச்சேரி மாவட்ட தமுமுக பொறுப்பாளர் பலுலுல்லா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த முத்தவல்லிகள், ஜமாத்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு தலைமை செயலாளர், அரசு துறை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

