அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, August 2, 2013

காரைக்காலில் உள்ள சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு புதிய மருந்துகளை வாங்க வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

நமது நாட்டின் பாரம்பரிய வைத்தியங்கலான சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதிக் மற்றும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகள் சமீபகாலமாக மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. அதனால், புதுச்சேரி அரசு காரைக்கால் பகுதிக்கு என தனியாக சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதிக் அடங்கிய ஒரு மருத்துவமனையை காரைக்கால் நேரு வீதியில் நிர்மலா ராணி தனியார் பள்ளிக்கு எதிரில் தொடங்கி உள்ளது, அதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவ சேவை அடைந்து வருகின்றனர். இந்த இந்திய மருத்துவ முறை மருத்துவமனைக்கு கேரளா,
கர்நாடக மற்றும் தமிழகத்திலிருந்து சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதிக்
மருந்துகள் வாங்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. அசோக் குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அந்த மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை வாங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் தேவையான அனைத்து மருந்துகளும் வாங்கப்பட்டன. அதன் பிறகு அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு சம்பந்தப்பட்ட நோய் நிவாரணங்களுக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன. சமீபகாலமாக மீண்டும் அந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, என்ன காரணம் என்று விசாரித்தால் சென்ற முறை வாங்கிய மருந்துகளுக்கு உரிய பணம் மருந்து கம்பெனிகளுக்கு கொடுக்கப்படாததால், அந்த மருந்து கம்பெனிகள் புதிய மருந்துகள் தர மறுக்கிறதாம். இதனால் பல்வேறு நோய்களுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் இருக்கின்ற மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்து வருகின்றனர். நோய்க்கு உரிய மருந்துகள் வழங்கப்படாததால் நோய் தீர வழியில்லாமல் மக்கள்
அவதியுறுகின்றனர்.
ஏற்கனவே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது, விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு புதுச்சேரி மற்றும் தஞ்சாவூர் செல்ல வழி காண்பிக்கும் மையமாக செயல்படுகிறது, எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த இந்திய மருத்துவ முறை மருத்துவமனையையும் முடக்க முயல்வது சரியானது அல்ல, இது காரைக்கால் மக்களுக்கு புதுச்சேரி அரசு செய்யும் துரோகமாகும்.
எனவே, புதுச்சேரி அரசும், நலவழித்துறையும், காரைக்கால் மாவட்ட
நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து மருந்து கம்பெனிகளுக்கு உள்ள பழைய பாக்கிகளை கொடுத்து விட்டு, புதிய மருந்துகள் வாங்கி காரைக்காலில் உள்ள இந்திய மருத்துவ முறை மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நெய்னா முஹம்மது கடிதம் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP