Fwd: புதுச்சேரி மாநில வக்பு சொத்துகளை பாதுக்காக்க முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் மற்றும் த.மு.மு.க உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். புதுச்சேரி ஆளுநரிடம் த.மு.மு.க வினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்
காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வீரேந்திர
காட்டாரியா அவர்களை தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் அவர்களின் ஆலோசனையின் பேரின் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் சந்தித்த தமுமுக நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதவாது :
1. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் ஒரு சிலரால்
ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது. மேலும், வக்பு வாரியம்
முறையாக ஒரு தலைவர் இல்லாமல் இயங்குவதால் பல பள்ளிவாசல் பணிகள் நடைபெற தடையாக உள்ளது. எனவே, புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்ஃப் வாரியத்தை தனியாக பிரிக்க வேண்டும், வக்ஃப் வாரியத்தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும், வக்பு வாரிய தலைவராக நியமிப்பவர் சமுதாய சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டுமெனவும் கேட்டு கொள்கிறோம். வக்பு சொத்துகளை பாதுக்காக்க முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் மற்றும் த.மு.மு.க உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கொண்ட ஒரு குழுவை புதுவை
மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும்.
2. புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் 7 சதவிகிதத்திற்கும் மேலாக
உள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி அரசு வழங்கியுள்ள 2 சதவீத
இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை A, B, C & D என அனைத்து பிரிவிற்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
இச்சந்திப்பின்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்தம்மாள்,
காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஆன்ட்ரோ அல்போன்ஸ், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், நகர தலைவர் ஜெகபர் சாதிக், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மெய்தீன், நகர துணை செயலாளர் செய்யது புஹாரி, காரை மேற்கு கிளை தலைவர் முஹம்மது இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்.
--
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
காரைக்கால் மாவட்டம்.