காரைக்காலில் ஆதரவற்ற மையத் - தமுமுக அடக்கம் செய்தது
கடந்த 18.10.2013 அன்று காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் படத்தில் உள்ள பெரியவர் இறந்த நிலையில் கிடந்தார், அவரது பெயர் ஹசன் முஹம்மது, (வயது 65), சிதம்பரம் என்று அவரது பையில் வைத்திருந்த பேப்பரில் இருந்தது, காவல்துறை மூலம் அவரது உடல் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை பிண கிடங்கில் வைக்கப்பட்டு, படத்தில் உள்ளவரை தெரிந்தால் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு தெரியப்படுத்தினால் முறைப்படி அவரது உடலை பெற்று தருகிறோம் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், யாரும் வரதாதால், இன்று (28.10.2013) காரைக்கால் மெய்தீன் பள்ளி மையவாடியில் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.




