அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, November 10, 2013

நவம்பர் 12 - காரைக்காலில் ரயில் மறியல் மற்றும் முழு கடை அடைப்பு - மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நவம்பர் 12 (செவ்வாய்க்கிழமை) அன்று காரைக்காலில் மாலை 4.10 மணிக்கு நடைபெறும் ரயில் மறியல் மற்றும் முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிப்பது என  (10.11.2013 ல்) காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹம்மது தலைமையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ம ம க மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹீம், அலாவுதீன், அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் ஹசனுதீன், மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க பொருளாளர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP