அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, November 16, 2013

தஞ்சை அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு - காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் - மனிதநேய மக்கள் மக்கள் கட்சி பங்கேற்பு

தஞ்சை அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பை கண்டித்து காரைக்காலில் தமிழ் உணர்வாளர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் அவர்கள் " உலகம் எங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் ஒன்றுபட்ட முயற்சியில், தஞ்சை அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பப்பட்டிருந்தது. அது எங்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆலயம் என தமிழ் உணர்வாளர்கள் அறிவித்துள்ள நிலையில் ஆக்கிரமிப்பு புகார்களை காரணம் காட்டி, அந்த நினைவு முற்றத்தை அதிகாலையிலேயே இடிக்கத் தொடங்கியது  கண்டிக்கத்தக்கது. அதில் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள் இருந்தால், சட்டரீதியாக கால அவகாசம் கொடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள்; கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு தரப்பினர் உணர்வுப்பூர்வமான ஆலயமாகக் கருதும் விவகாரத்தில், தமிழக அரசு இவ்வளவு கடுமை காட்ட தேவையில்லை" என்றார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம ம க காரை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் யூசுப்கான், நகர தலைவர் ஜெகபர் சாதிக், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட அணி செயலாளர்கள் ரியாஸ், ஜியாவுதீன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புஹாரி, ஷெரிப், புதுத்துறை கிளை நிர்வாகிகள் யூசுப், பயாஸ், மற்றும் பல்வேறு கட்சிகள்  மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP