Fwd: [தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்] முஹர்ரம் பண்டிகை - புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை முதல் அமைச்சர் அறிவிப்பு - தமுமுக கோரிக்கை ஏற்பு.
முஹர்ரம் பண்டிகை - புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை முதல் அமைச்சர் அறிவிப்பு - தமுமுக கோரிக்கை ஏற்பு.
முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசும், தமிழக அரசும் நாளை (15.11.2013) அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு முஹர்ரம் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்காமல் அன்றைய தினம் (R.H) Restricted Holiday என அறிவித்து இருந்தது. எனவே, புதுச்சேரியிலும் முஹர்ரம் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்து புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அவர்கள் மலேசியா சென்றுவிட்டபடியால் த.மு.மு.க புதுச்சேரி மாவட்ட அமைப்புக்குழு தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் பலுலுல்லா, அப்துல் சமது, ஷெரிப், சாகுல் ஹமீது, புதுச்சேரி ஈத்கா பள்ளி முத்தவல்லி அப்துல் சலாம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகி அப்துல் சுபுஹான் ஆகியோர் புதுச்சேரி தலைமை செயலாளர் சேத்தன் B.சாங்கி அவர்களை சென்ற 11.11.2013 அன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர், மனுவை பெற்றுக்கொண்ட தலைமை செயலாளர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும், முதல்வர் வந்தவுடன் பேசி முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார், அதனை தொடர்ந்து அரசு உள்துறை கூடுதல் செயலர் பங்கஜ் குமார் ஜா அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனிடையே புதுச்சேரி அரசு கொரடா நேரு, M.L.A அவர்களையும் தமுமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினார். அரசு கொரடா நேரு, M.L.A அவர்களும் விடுமுறை அளிப்பது தொடர்பாக அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து முதல் அமைச்சர் அவர்கள் புதுச்சேரியில் நாளை (15.11.2013) முஹர்ரம் பண்டிகை தினத்தை அரசு விடுமுறை என அறிவித்தார்
