காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் தமுமுக புதிய கிளை துவக்கம்
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதிய கிளை துவங்கப்பட்டது, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் , நகர தலைவர் ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், ம ம க நகர செயலாளர் கமால் ஹுசேன், தமுமுக நகர துணை செயலாளர் புஹாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அம்பகரத்தூர் கிளையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளர் (மமக) - M. முஹம்மது ரியாஸ்
துணை செயலாளர் (தமுமுக) - R. ஜெகபர் சாதிக்
துணை செயலாளர் (மமக) - A.முஹம்மது பஹது
துணை செயலாளர் (மமக) - M. முஹம்மது சாஹுல்

