அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, November 26, 2013

அம்பகரத்தூர் சின்னக்கடை தெருவில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி அரசுக்கு கோரிக்கை

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் பெரியகடை தெரு, சின்னக்கடை தெரு மற்றும் கோயில் நிறுத்தம் என மூன்று பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் சின்னக்கடை பேருந்து நிறுத்தத்தில் சமீபகாலமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இது சம்பந்தமாக அந்த வழியாக செல்லும் பேருந்து ஓட்டுனரிடம் பலமுறை கூறியும், ஓட்டுனர்கள் அலட்சிய போக்கினையே காட்டுகின்றனர். எனவே, புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னக்கடை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்றும், அப்படி நிற்காமல் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும். இதன் பிறகும் அம்பகரத்தூர் சின்னக்கடை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிவரும் என மனிதநேய மக்கள் கட்சி அம்பகரத்தூர் கிளை சார்பாக ம ம க கிளை தலைவர் செய்யது முபாரக் அவர்கள் தலைமையில் புகார் மனு காரைக்கால் மண்டல போக்குவரத்து அதிகாரி அவர்களிடம் வழங்கப்பட்டது. மனுவின் நகல்கள் திருநள்ளார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் P.R. சிவா, மாவட்ட ஆட்சியர், PRTC காரைக்கால் கிளைமேலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்கால் கிளை மேலாளர் ஆகியோர்களுக்கும் வழங்கப்பட்டது. இச்சந்திப்பின்போது துணை தலைவர் முஹம்மது அன்ஹாருதீன், துணை செயலாளர் முஹம்மது பஹது மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP