பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி - காரைக்காலில், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜித், காவி மதவெறியர்களால் தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1995 முதல் தொடர்ந்து தமுமுக, ஜனாயக வழியில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று,
- பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்,
- பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமுமுக சார்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் அரசு வணங்காமுடி, பார்வர்ட் பிளாக் புதுச்சேரி மாநில தலைவர் முஹம்மது பிலால், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் குமணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் இக்பால், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க பொருளாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜியாவுதீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் சிக்கந்தர், நகர பொருளாளர் சபுருதீன், மமக நகர செயலாளர் கமால் ஹுசைன், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், நிரவி கிளை தலைவர் யூனுஸ், புதுத்துறை கிளை தலைவர் யூசுப், வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர், திருநள்ளார் கிளை செயலாளர் கனி, கிழக்கு கிளை தலைவர் செய்யது ஆரிப் ஷேக் அலாவுதீன், உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் நன்றி கூறினார்.
























