அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, December 10, 2013

காரைக்கால் மாவட்ட த.மு.மு.க விற்கு சிறந்த இரத்ததான விருது

காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இரத்ததானம் செய்ததற்கான சிறந்த இரத்ததான விருது புதுச்சேரி அரசு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது. விருதினை காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் Dr.கந்தசாமி அவர்களால் தமுமுக காரைக்கால் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி Dr.உதயக்குமார்,  Dr.பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், கிளை செயலாளர் முஹம்மது பயாஸ் உட்பட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP