புதுச்சேரி அரசின் 2015 ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரியில் இஸ்லாமிய நாட்குறிப்பையும் சேர்த்து வெளியிட வேண்டும் - புதுச்சேரி அரசுக்கு தமுமுக கோரிக்கை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஷாஜஹான், முஹம்மது சர்புதீன், முஹம்மது ஜெக்கரியா, நகர தலைவர் ஜெகபர் சாதிக், முஹம்மது யூசுப், செய்யது சுல்தான் புஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி அரசுக்கு அனுப்புவது முடிவு செய்யப்பட்டது.
1. புதுச்சேரி அரசு வருடந்தோறும் வெளியிடும் காலண்டர் (மாத நாட்காட்டி) மற்றும் டைரி (தினக்குறிப்பு) ஆகியவற்றில் ஆங்கில வருட கணக்கு மற்றும் தமிழ் வருட கணக்கு நாள் மட்டுமே குறிப்பிட்டு வெளியிடப்பட்டு வருகிறது, புதுச்சேரி மாநிலத்தில் அதிகளவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் கடைபிடிக்கும் இஸ்லாமிய நாட்காட்டி கணக்கு குறிக்காதது முஸ்லிம்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, புதுச்சேரி முதல் அமைச்சர் ந.ரெங்கசாமி அவர்கள் முஸ்லிம்களையும் மதிக்கும் வகையில் புதுச்சேரி அரசு 2015 ம் ஆண்டுக்கு வெளியிடும் காலண்டர் மற்றும் டைரி ஆகியவற்றில் இஸ்லாமிய நாட்குறிப்பையும் சேர்த்து வெளியிட வேண்டும் என தமுமுக கேட்டு கொள்கிறது.