அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, October 25, 2014

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர் உடலை தேடும் பணியில் அலட்சியம் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தை சேர்ந்த செய்யது கபீர் (வயது 33) என்பவர் தீபாவளி (22.10.2014) அன்று திருமலைராஜனர் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரது உடலை தேடும் பணியில் காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகமும், தீயணைப்பு துறையும், கடலோர காவல் படையும் அலட்சியம் காட்டி வருவதால், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட செய்யது கபீர் அவர்களின் குடும்பத்தினரே அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு, அதற்குண்டான செலவையும் செய்து வருகின்றனர். இருந்தும் இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. செய்யது கபீரின் மனைவி தற்பொழுது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனிடையே, உடலை தேடும் பணியில் அரசு காட்டி வரும் அலட்ச்சியத்தால் கோபப்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் தமுமுகவினர் இன்று (25.10.2014) இரவு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்,
அங்கு வந்த காவல்துறையினர் தமுமுக மாவட்ட செயலாளர்  அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்ட தலைவர் லியாக்கத் அலி, 
நகர தலைவர் ஜெகபர்  சாதிக் மற்றும் செய்யது கபீர் அவர்களின் உறவினர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் அவர்கள் உடலை தேடும் பணியை தீவிரபடுத்துவதாகவும், தேடும் பணிக்கு உண்டான செலவை அரசே ஏற்று கொள்வதாகவும், இன்னும் இரண்டு தினங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் உடனடியாக துணை மாவட்ட  ஆட்சியர் அவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு மீன் வளத்துறை மூலம் நாளை இரண்டு boat மூலம் கடலில் தேடுவதற்கும், கடலோரத்தில் போலீஸ் ஜீப் மூலம் தேடுவதற்கும் உத்தரவு இடப்பட்டதை தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமுமுக மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான், நகர செயலாளர் கமால் ஹுசைன் உட்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP