திரு-பட்டினத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல் அமைச்சரிடம் தமுமுக மற்றும் குடும்பத்தினர் நேரில் கோரிக்கை
காரைக்கால் மாவட்டம். காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தை சேர்ந்த செய்யது கபீர் (வயது 33) திருமலைராஜனர் ஆற்றில் தடுமாறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவரது உடலை தேடும் பணியில் காரைக்கால் மாவட்ட அரசு நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்ததால், அவரது உறவினர்கள் மற்றும் தமுமுகவினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் வல்லவன் அவர்கள் உடலை தேடும் பணியை தீவிரபடுத்த உத்தரவிட்டார், அதனடிப்படியில் மீன் வளத்துறை மூலம் பூம்புகார் மற்றும் வேதாரண்யம் வரை இரண்டு FRB boat களில் கடலில் தேடும் பணியிலும், கடல் ஓரத்தில் ஜீப் மூலமும் தேடும் பணியிலும் ஈடுபட்டனர், இருந்தும் இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல் அமைச்சர் ந.ரெங்கசாமி அவர்களை புதுச்சேரி சட்டமன்றத்தில் காரைக்கால் வளர்ச்சி குழும தலைவரும், நிரவி-திருபட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.M.C.சிவகுமார் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான், செய்யது கபீரின் தந்தை முஹம்மது அலி ஜின்னா, மனைவியின் தந்தை இப்ராஹீம் ஆகியோர் சந்தித்து செய்யது கபீரின் மனைவி தற்பொழுது 9 மாத கர்ப்பிணியாக உள்ளாதாலும், அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதாலும் செய்யது கபீர் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று கொண்ட முதல் அமைச்சர் அவர்கள் நிவாரணம் வழங்க ஆவண செய்வதாக கூறினார். இச்சந்திப்பிபோது தமுமுக மாவட்ட முன்னாள் தலைவர் லியாக்கத் அலி, நகர தலைவர் ஜெகபர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் கமால் ஹுசைன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஷர்புதீன், கிளை தலைவர் முஹம்மது யூசுப், உறவினர்கள் பக்கர், சிராஜுதீன், காசிம், உமர் ஆகியோர் உடனிருந்தனர்.





