அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, November 14, 2014

தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, காரைக்காலில் ..... மனிதநேய மக்கள் கட்சி... கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு, இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்த விவகாரம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள வில்லையோ என கருதவேண்டியுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி  இலங்கை அரசு ஐந்து மீனவர்களுக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு  இலங்கையிடம் பேசி மீனவர்களை மீட்டெடுக்க வேண்டும், இலங்கை அரசு 5 மீனவர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் காசிம், மெய்தீன்  ஆகியோர் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் நைனா  முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சர்புதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஜியாவுதீன், முஹம்மது ஜெக்கரியா, சதாம் ஹுசைன்,  கிளை தலைவர் ராஜா முஹம்மது, முஹம்மது யூசுப், முஹம்மது சுல்தான் செய்யது புஹாரி உட்பட  ஏராளமானோர் கலந்து  கொண்டனர், முடிவில்  நகர செயலாளர் கமால் ஹுசைன் நன்றியுரை கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP