காரைக்காலில் மக்கள் வாழும் பகுதியில் பன்றிகள் வளர்ப்பு - வியாதிகள் பரவும் அபாயம் - பன்றிகளை பிடிக்க காரைக்கால் நகராட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்காலில் மக்கள் வாழும் பகுதியில் பன்றிகள் வளர்ப்பு - வியாதிகள் பரவும் அபாயம் - பன்றிகளை பிடிக்க
காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட திருநள்ளார் ரோட்டை ஒட்டி உள்ள ராமையா நகர், ராவன்னா நகர் மற்றும் புஷ்பா நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. மேற்கண்ட வீடுகளுக்கு மத்தியில் காலியான மனைகளில் பன்றிகளை கொண்டு வந்து விட்டு ஒரு சிலர் வளர்த்து வளர்கின்றனர். மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் உலாவி வருவதால் பல்வேறு வியாதிகள் பரவும் அபாயம் உள்ளன. தற்பொழுது டெங்கு மற்றும் பல்வேறு வியாதிகளில் காரைக்கால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, வியாதிகளை பரப்பும் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகளை கொண்டு வந்து விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காரைக்கால் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் நகர செயலாளர் G.கமால் ஹுசைன் கடிதம் கொடுத்துள்ளார்
காரைக்கால் நகராட்சிக்கு
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை