புதுச்சேரியில் பால் விலை உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
புதுச்சேரி அரசு, வரலாறு காணாத வகையில் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் என உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஏற்கனவே மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. புதுச்சேரியை ஆளும் ரங்கசாமி அரசு நிதி பற்றாக்குறை என்று ஒரு பக்கம் கூறி கொண்டு மக்களின் மீது பல்வேறு வகைகளில் வரிகளை உயர்த்தியும், இன்னொருபக்கம் வாரிய தலைவர் பதவிகளை வழங்கியும் அரசு பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து கொண்டு உள்ளது. அந்த செலவுகளை ஈடு செய்யும் விதமாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது விலை உயர்வையும், வரிகளையும் உயர்த்தி வருகிறது.
எனவே புதுச்சேரி அரசு, உயர்த்தியுள்ள பால் கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.