அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, November 29, 2014

பறவைக் காய்ச்சல் அச்சம் - காரைக்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நைனா முஹம்மது வெளியிடும் கண்டன அறிக்கை:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் அந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள்  நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோல் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு பறவைகளோ, கோழிகளோ, வாத்துகளோ எடுத்துவர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், திருநள்ளார் சனிபெயர்ச்சி விழா வரும் டிசம்பர் 16 ந் தேதி நடைபெற உள்ளதையோட்டி நமது அண்டை மாநிலங்களிளிருந்து ஏராளமானவர்கள் காரைக்காலுக்கு வருகை தருவார்கள். ஆகவே, புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் காரைக்கால் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், அதுபோல் டெங்கு மற்றும் மலேரியா நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

இவண்

(எம். நைனா முஹம்மது)
மாவட்ட செயலாளர்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP