பறவை காய்ச்சல் நோயை தடுக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி நேரில் மனு
பறவை காய்ச்சல் நோயை தடுக்க
காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம்
மனிதநேய மக்கள் கட்சி நேரில் மனு
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் அந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு பறவைகளோ, கோழிகளோ, வாத்துகளோ எடுத்துவர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், திருநள்ளார் சனிபெயர்ச்சி விழா வரும் டிசம்பர் 16 ந் தேதி நடைபெற உள்ளதையோட்டி நமது அண்டை மாநிலங்களிளிருந்து ஏராளமானவர்கள் காரைக்காலுக்கு வருகை தருவார்கள். ஆகவே, புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் காரைக்கால் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், அதுபோல் டெங்கு மற்றும் மலேரியா நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் கூடுதல் மாவட்ட ஆட்சியர் முஹம்மது மன்சூர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்பர்ஷா ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (1.12.2014) மாலையே மாவட்ட ஆட்சியர் அவர்கள் பறவை காய்ச்சல் தடுப்பு சம்பந்தமான அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.