பாபர் பள்ளிவாசலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வலியுறுத்தி தமுமுக சார்பாக காரைக்காலில் இருந்து குடியரசு தலைவருக்கு 3000 அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன
பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடைகின்றது. பாபர் பள்ளிவாசலை தரைமட்டமாக்கி மிக கொடூரமான குற்றத்தை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அதுபோல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் P.V.நரசிம்மராவ் அவர்கள் நாட்டு மக்களுக்கு வாகளித்ததுபோல் பாபர் பள்ளிவாசலை அது இருந்த இடத்திலேயே மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்திய குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்புமாறு தமுமுக விடுத்த வேண்டுகோளை ஏற்று காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 3000 அஞ்சல் அட்டைகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன, இதில் காரைக்கால் நகரம் சார்பாக 1200, அம்பகரத்தூர் கிளை மூலம் 500, திருபட்டினம் கிளை மூலம் 500, நல்லம்பல் கிளை மூலம் 300, நிரவி கிளை மூலம் 200, கருக்கங்குடி கிளை மூலம் 150, நேரு நகர் கிளை மூலம் 100, புதுத்துறை கிளை மூலம் 50 அனுப்பப்பட்டன, அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அலாவுதீன், நைனா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாதிக் அலி, ஷாஜஹான், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர நிர்வாக குழு உறுப்பினர் கமால் ஹுசைன், மாவட்ட செய்தி தொடர்பாளர் செய்யது புஹாரி, மாவட்ட மனித உரிமை பாதுக்காப்பு அணி செயலாளர் ஜெக்கரியா, புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, முன்னாள் மாவட்ட தலைவர் லியாக்கத் அலி, திருபட்டினம் கிளை தலைவர் ஹாஜா ஜெகபர் சாதிக், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், நல்லம்பல் கிளை தலைவர் முஹம்மது பிர்தௌஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



