டிசம்பர் 6, 2014 : காரைக்காலில் - கருஞ்சட்டைகளுடன் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 6 1992 ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆன பிறகும் கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. இச்சூழலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க கோரியும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட தமுமுக சார்பாக கருஞ்சட்டை அணிந்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் அனைவரையும் வரவேற்றார், தலைமை செயற்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாதிக் அலி, ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமுமுக தலைமை கழக பேச்சாளர் மிஸ்பாஹுல் ஹுதா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது, இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பொன் செந்தமிழ் செல்வன், மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கலியபெருமாள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முஹம்மது பிலால், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் குமணன், காரைக்கால் ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமா அத் தலைவர் முஹம்மது யாசின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது நன்றியுரை கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர நிர்வாக குழு உறுப்பினர் கமால் ஹுசைன், மாவட்ட செய்தி தொடர்பாளர் செய்யது புஹாரி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், புதுத்துறை கிளை தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் ஜெக்கரியா, மனிதநேய தொழிற்சங்க செயலாளர் ஹாஜா மெய்தீன், மாவட்ட மாணவரணி செயலாளர் சதாம் ஹுசைன், திருபட்டினம் கிளை தலைவர் ஹாஜா ஜெகபர் சாதிக், அம்பகரத்தூர் கிளை தலைவர் செய்யது முபாரக், நல்லம்பல் கிளை தலைவர் முஹம்மது பிர்தௌஸ், முன்னாள் மாவட்ட தலைவர் லியாக்கத் அலி, நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, முஹம்மது ரியாஸ், முஹம்மது பாசித் ஆகியோர் செய்திருந்தனர், ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.








