தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர அரசையும், வழி நடத்திய மத்திய அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
இலங்கையில் மசூதிகள் மற்றும் கோயில்களை உடைத்து நொறுக்கிய இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி கோயிலுக்கு வருகை தந்ததை ஜனநாயக வழியில் எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆந்திராவுக்குச் சென்று போராட்டங்களை நடத்தியுள்ளன.
மோடியின் மத்திய அரசில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேச கட்சியும் இடம்பிடித்திருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை நசுக்கும் விதத்தில் மோடி அரசின் உத்தரவுப்படியும், சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின்படியும் ஆந்திர போலீசார், போராட்டம் நடத்தியவர்கள் மீதும், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப் பத்திரிக்கையாளர்களின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளன.
தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய ஆந்திர காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தாக்குதலை தூண்டிய மோடி தலைமையிலான மத்திய அரசையும், தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஆந்திர அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது