அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, December 10, 2014

மண்ணெண்ணெய்க்கான மானியத்தை ரத்து செய்ய கூடாது ! ! ‪மனிதநேய_மக்கள்_கட்சி_வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நைனா முஹம்மது வெளியிடும் அறிக்கை:

பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கூட்டுறவு கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசுக்கு நடுவண் அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு வழங்கும் மானியத்தின் அளவு குறையும் என்ற போதிலும், மண்எண்ணெயை எரிபொருளாகவும், விளக்கேற்றவும் பயன்படுத்துவோர் மிகவும் அடித்தட்டிலே உள்ள கிராமப்புற மக்கள் தான் என்பதை மனதிலே கொண்டு, அப்படிப்பட்ட ஏழை-எளிய மக்களைப்பாதிக்கும் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளைக் கை விட்டு விடுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து, ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது அடித்தட்டு மக்களின் அவலங்களை புரிந்துகொள்ளாத ஒரு முதலாளித்துவ மனநிலைக் கொண்ட அரசாக ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது மற்றொரு ஆதாரமாகும்.

மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்குவதால் ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி நிதி சுமை ஏற்படுகிறது என கூறுவதை ஏற்க முடியாது. நடுவண் அரசின் திட்டங்களின் வழியாக பன்னாட்டு பெரு நிறுவனங்களும், உள்நாட்டு முதலாளிகளும் சுரண்டி பிழைக்கும்போது மின்சார வசதியற்ற ஏழை மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய மண்ணெண்ணெய் விவகாரத்தில் மிச்சம் பிடிக்க நினைப்பது நியாயமாகாது.

ஏற்கனவே, புதுச்சேரியில் உள்ள குடும்ப உணவு பங்கிட்டு அட்டைமூலம் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் குறைத்து வழங்கப்பட்டு வரும் நிலையிலும், 

மண்ணெண்ணெய் வினியோகத்தில் ஏற்கனவே பற்றாக்குறை இருக்கும் நிலையில், மானியத்தை ரத்து செய்தால் வெளிச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிர்பந்தம் எளிய மக்களுக்கு ஏற்படும்பல மாநில முதல்வர்களும் நடுவண் அரசின் முடிவை எதிர்த்துள்ளனர்.

எனவே, பாஜக நடுவண் அரசு பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளை திருப்திபடுத்துவதில் காட்டும் அக்கறையை, எளிய மக்களின் மீது காட்டும் வகையில், மண்ணெண்ணெய்க்கான மானியத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP