அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, December 18, 2014

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண்கள் தற்கொலைக்கு                காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நைனா முஹம்மது வெளியிடும் கண்டன அறிக்கை:

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான சகோதரிகள் அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட ரீதியாக 12 ஆண்டுகள் போராடினார்கள். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்காததால் அவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து 7 பேரும்  தற்கொலை செய்துகொள்ள கடலில் குதித்துள்ளனர். அதில் 3 பேர் இறந்துள்ளனர். 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அந்த 4 பேருக்கும் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடலில் குதிக்க சென்ற இடத்திலும் ஒரு சகோதரியை 2 பேர் கற்பழித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு காவல்துறையின் அலட்சியமும் மிக முக்கிய காரணமாகும் 

எனவே, இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் அரவிந்தர் ஆசிரமே ஏற்க வேண்டும்.  ஆகவே, புதுச்சேரி அரசு அரவிந்த் ஆசிரமம் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரவிந்த ஆசிரமத்தை மத்திய, மாநில அரசுகள் கையகபடுத்தி அதனை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், மேலும், பல பெண்கள் ஆசிரமத்தில் உள்ளதால் அவர்களுக்கு உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும், இந்த தற்கொலை குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை  கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும், மீதமுள்ள 4 பேருக்கும் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு  கொள்கிறது.

மேலும், மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தை  மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்து நடத்துகிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP