காரைக்கால் மாவட்டம்,அம்பகரத்தூரில் - த.மு.மு.க வின் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
தீர்மானங்கள்
1. புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்கள் 7 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை A, B, C & D என அனைத்து பிரிவிற்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது
2. புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு மத்திய-மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முழுமையாக சிறுபான்மையின முஸ்லிம்களுக்காக செலவு செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது
3. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது. எனவே, புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்ஃப் வாரியத்தை தனியாக பிரிக்கவும், மேலும் வக்பு சொத்துகளை பாதுக்காக்க முத்தவல்லிகள், ஜமாத்தார்கள் மற்றும் த.மு.மு.க உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கொண்ட ஒரு குழுவை புதுவை மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது.
4. புதுச்சேரி அரசு வருடந்தோறும் வெளியிடும் காலண்டரில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வருட கணக்கு நாள் மட்டுமே குறிப்பிட்டு வெளியிடப்பட்டு வருகிறது, புதுச்சேரி மாநிலத்தில் அதிகளவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் கடைபிடிக்கும் இஸ்லாமிய நாட்காட்டி கணக்கு குறிக்காதது முஸ்லிம்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, முஸ்லிம்களையும் மதிக்கும் வகையில் புதுச்சேரி அரசு வெளியிடும் காலண்டரில் இஸ்லாமிய நாட்குறிப்பையும் சேர்த்து வெளியிட வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது.
5. புதுச்சேரி மாநிலம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் புதுச்சேரி மாநிலத்தை ஆக்கிரமித்து, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்களை குடிக்கு அடிமையாக்கி பல குடும்பங்களை வீதியில் நிறுத்திய மதுவை புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக தடை செய்து, புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது.
6. திருநள்ளார் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக சாலைகள் சுத்தம் செய்யப்படாமல் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் நிறைந்து தெருக்கள் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது, அதுபோல் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் சாக்கடைகளில் குப்பைகள் நிறைந்து கழிவு நீர் ஓடாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாகி மக்கள் வியாதிகளில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் நாய்கள் பெருக்கம் அதிகமாகி சாலைகளில் நடமாட முடியவில்லை மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் நாய் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே மக்கள் நலனில் அக்கறைகொண்டு சாலைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்தும், சாலைகளில் திரியும் நாய் மற்றும் மாடுகளை பிடிக்க வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது
7. திருநள்ளார் கொம்யூனுக்கு உட்பட்ட அம்பகரத்தூர், நல்லம்பல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த பல வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஆகவே புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து சாலைகளையும் புதுப்பிக்கவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நகர்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என புதுச்சேரி அரசை தமுமுக கேட்டு கொள்கிறது
8. மக்கா, மதினா ஆகிய இரு புனித இறை இல்லங்களின் பராமரிப்பாளரும் சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ்வின் மறைவுக்கு தமுமுக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது






















