காரைக்கால் தமுமுகவிற்கு 2014 ம் ஆண்டுக்கான இரத்ததான அரசு விருது
தமுமுகவிற்கு 2014 ம் ஆண்டுக்கான இரத்ததான அரசு விருதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வல்லவன் அவர்கள் இன்று (26.02.2015) தமுமுக நகர பொருளாளர் கமால் ஹுசைன் அவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார், தமுமுக நகர துணை செயலாளர் செய்யது புஹாரி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.
