அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, March 8, 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது சங்கப் பரிவார் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் M.நைனா முஹம்மது வெளியிடும் பத்திரிகை அறிக்கை

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர், ஒளிபதிவாளர் மற்றும் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்த துணிந்துள்ள பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினரை வன்மையாக கண்டிக்கிறோம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைச் சகிக்க முடியாத சங்பரிவார அமைப்பினர் புதிய தலைமுறை தொலைக்கட்சி. மீது வன்முறைத் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது சங்பரிவார அமைப்பினர் தாக்குதல் நடத்தி, ஊழியர்களைக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்று சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் மீதான தங்கள் மரியாதையை சங்க பரிவார் அமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர் . இந்த தாக்குதல் மூலம் ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினர் மீண்டும் நிருபித்துள்ளனர்.

இந்த தாக்குதலை தடுக்க தவறிய தமிழக காவல்துறையினரையும் கண்டிக்கிறோம்.

ஃபாசிச சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகும், எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் , ஊடகங்கள் தனிமனிதர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கும் நம் வலிமையான ஆதரவைத் தெரிவிப்போம்.
இத்தகைய பயங்கரவாதப் போக்கை அனைவரும் ஓரணியில் நின்று கண்டிப்போம்

(ஒ-ம்) M.நைனா முஹம்மது

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP