காரைக்காலில் உள்ள இரண்டு கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
பத்திரிக்கை செய்தி
காரைக்காலில் உள்ள இரண்டு கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நைனா முஹம்மது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதவாது :
மத்திய மற்றும் புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி சமையல் எரிவாயு சிலிண்டர் பெற ஆதார் எண்ணை கட்டயாம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவின்பேரில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்து அந்த நகலையும் ஆதார் அட்டை நகலையும் காரைக்கலில் சிலிண்டர் வழங்கும் நிறுவனங்களான சித்ரா மற்றும் சத்யா கேஸ் ஏஜென்சியில் வழங்கி வருகின்றனர். ஆனால், இந்நிறுவனங்கள் வாங்கிய ஆதார் எண்ணை முறையாக இணைக்காமல் விட்டதால் மீண்டும் ஒருமுறையும், பலர் பல முறையும் ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி புத்தக நகலை கொடுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் புத்தகத்துடன் மேற்கண்ட இரு நிறுவனங்களும் இணைக்காமல் விட்ட காரணத்தினால், தற்பொழுது ஆதார் எண் மற்றும் வங்கி எண் இணைக்கவில்லை என்ற காரணத்தை கூறி சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு தற்காலிகமாக கேஸ் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று கேட்டும் உரிய பதில் இல்லை, இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சிலிண்டர் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
ஆகவே, தாங்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட இரு கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிலும் விசாரனை செய்து, மக்களை மீண்டும் மீண்டும் அலைகழிக்காமல் உடனடியாக மக்களிடம் வாங்கி வைத்துள்ள ஆதார் எண் மற்றும் வங்கி எண் நகலை கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் என்னுடன் இணைக்கவும், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
