முழுஅடைப்பை வெற்றி பெற செய்த காரைக்கால் மக்களுக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நன்றி
முழுஅடைப்பை வெற்றி பெற செய்த காரைக்கால் மக்களுக்கு
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நன்றி
★★★★★★★★★★★★★★★★★★★★
தமுமுக மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் M.நைனா முஹம்மது கூட்டாக வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டுவதை கண்டித்தும், அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்திட
வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், வணிகர் சங்கங்கள், தமிழகம் மற்றும் காரைக்கால் முழுவதும் இன்று (28-03-2015) முழு வேலை நிறுத்தம் அறிவித்திருந்தன.
அதனை ஏற்று தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் உணர்வுப்பூர்வமாக ஏற்று தமிழகம் மற்றும் காரைக்கால் முழுவதும் கடையடைப்பு
மற்றும் வேலைநிறுத்தம் செய்துள்ளதால் முழுஅடைப்பு வெற்றிப்பெற்றுள்ளது.
அதற்காக தமிழக மற்றும் புதுச்சேரி மக்களையும் இதற்கான முயற்சிகள் செய்த விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள் வணிகர்
சங்கங்கள் உள்ளிட்ட ஆதரவளித்த அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய அரசு, தமிழக மற்றும் புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதித்து காவேரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட முயற்சிப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.





