அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, April 4, 2015

வாகன விபத்தில் மார்க்க அறிஞர்கள் 9 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு நிவாரண நிதி வழங்க தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பள்ளப்பட்டி மக்தூமியா அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் எட்டு பேரும் முஅத்தினும் ஆக மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர் என்றும் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளார் என்றும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.

இறந்தவர்களின் மறுமை வெற்றிக்கு பிரார்த்தனையும், உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம்வல்ல இறைவன் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவானாக. மார்க்கம் கற்ற கல்லூரியின் 9 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது சமூகத்தின் பேரிழப்பாகும்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை கருணையுடன் வழங்கிட வேண்டுமென்று தமுமுக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP