அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, April 12, 2015

திருபட்டினத்தில் தமுமுக இரத்ததான முகாம்

திருபட்டினத்தில் தமுமுக இரத்ததான முகாம்

காரைக்கால் மாவட்டம், திருபட்டினம் கிளை 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 12.4.2015 அன்று திருபட்டினத்தில் கிளை செயலாளர் ஹாஜா ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட முன்னாள் தலைவர் அலாவுதீன், கிளை பொருளாளர் அபூபக்கர், மாவட்ட முன்னாள் துணை தலைவர் யூசுப்கான், முன்னாள் செயலாளர் ராஜா முஹம்மது, முன்னாள் துணை செயலாளர் மெய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஷாஜஹான், நகர செயலாளர் சாதிக் அலி, நகர பொருளாளர் கமால் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பழனிவேல், அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி
மதன்பாபு,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நைனா முஹமது, முத்தவல்லி ஜமாலுதீன் மரைக்கார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தருமு, ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் ஐயப்பன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

அரசு பொது மருத்துவமணை மருத்துவர் பிரியதர்ஷினி தலைமையில் ஆலோசகர் வின்சென்ட், சீனியர் லேப் டெக்னிசியன் தர்மராஜ், செவிலியர் ராஜேஷ் கண்ணா, லேப் டெக்னிசியன் சாந்தி  ஆகியோர் ரத்த சேகரிப்பு செய்தனர், இம்முகாமில் 32 பேர் இரத்ததானம் செய்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருபட்டினம் கிளை துணை செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், முஹம்மது அமீருதீன், அன்வர் ஹூசேன் மற்றும் செயல்வீரர்கள் முஹம்மது தாரிக், ஹாஜா ஷேக் அலாவுதீன், முஹம்மது ஆசிக், ஜெய்னுதீன், முஹம்மது சுல்தான், முஹம்மது ஹுசைன் சாதிக், முஹம்மது அர்சாத், முன்னா அஹமது மாமூன், முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில்
நகர துணை செயலாளர் புஹாரி, மாவட்ட முன்னாள் தலைவர்
லியாகத் அலி, மாவட்ட முன்னால் தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், காரை (மேற்கு) கிளை செயலாளர் சதாம் ஹுசைன், துணை செயலாளர்கள் முஹம்மது அஸ்ரப், முஹம்மது ஷாஹுல் ஹமீது, அம்பகரத்தூர் கிளை செயலாளர் முஹம்மது அன்ஹாருதீன், பொருளாளர் முஹம்மது பாசில், மமக செயலாளர் முஹம்மது பஹது, மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சர்புதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்பர்ஷா உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP