மத்திய சிறுபான்மை விவகாரத்துறையின் 2014-15 ம் ஆண்டுக்கான சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி ஊக்கத்தொகையை புதுச்சேரி அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு - மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது அவர்கள் புதுச்சேரி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
மத்திய அரசின் சிறுபான்மை விவகாரத்துறையின் மூலம் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்படி, சிறுபான்மையினத்தை சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்துவர் உட்பட 6 மதங்களை சேர்ந்த 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி ஊக்கத்தொகையை புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் வழங்கி வருகிறது.
சென்ற 2014-15 ம் ஆண்டிற்கானசிறுபான்மையினருக்கான கல்வி ஊக்கத்தொகை பள்ளி இறுதிக்கல்விக்கு முன்பான (Pre-Matric) 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை, பள்ளி உயர் கல்வி (Post Matric) 11 ம் வகுப்பு முதல் (Ph-D) முனைவர் பட்டப்படிப்பு வரை உள்ளவர்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 2648 மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்காக ரூ.42,46,500/- மத்திய சிறுபான்மை விவகாரத்துறை சென்ற 30.12.2014 அன்று புதுச்சேரி அரசுக்கு வழங்கி விட்டது. ஆனால், புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மேற்கண்ட நிதியை பெற்று 5 மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் இதுவரை 2014-15 ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட மாணவ, மாணவியர்களுக்கு அந்த கல்வி ஊக்கத்தொகையை வழங்காமல் உள்ளது. இச்செயல் மிகவும் கண்டித்தக்க செயலாகும். மத்திய அரசு சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு வழங்கிய நிதி எங்கே ? எனவே, புதுச்சேரி அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக 2014-15 ம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகையை சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
மேலும், சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக சென்ற 18.06.2015 அன்று புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை 2015-16 ம் ஆண்டிற்கான அறிவிப்பை வெளியிட்டு கடைசி தேதியாக 31.07.2015 என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, சமூக நலத்துறை காலந்தாழ்த்தாமல் உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் கேட்டு கொள்கிறோம். மத்திய அரசின் சிறுபான்மை விவகாரத்துறையின் மூலம் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்படி, சிறுபான்மையினத்தை சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்துவர் உட்பட 6 மதங்களை சேர்ந்த 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி ஊக்கத்தொகையை புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் வழங்கி வருகிறது.