அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, June 1, 2015

காரைக்காலில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்

காரைக்காலில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு  துரிதப்படுத்த வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி கோரிக்கை 

காரைக்காலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், இச்சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, ஷாஜஹான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அக்பர்ஷா, மனிதநேய வர்த்தக சங்க மாவட்டசெயலாளர் அன்வர், நகர செயலாளர் முஹம்மது சர்புதீன் ஆகியோர் உடனிருந்தனர். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் கூறியதாவது :

1. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காரைக்காலில் விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு அதற்க்கான நிலம் ஆர்ஜித பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது, தற்பொழுது சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் காரைக்காலில் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மீண்டும் அறிவித்துள்ளார். எனவே, அறிவிப்போடு இல்லாமல் காரைக்காலில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்.

2. காரைக்கால், திருநள்ளார் பகுதியை கோயில் நகரமாக அறிவித்து, திருநள்ளார் பகுதியை மேம்படுத்துவதற்க்காக ஒதுக்கப்பட்ட தொகை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு திருநள்ளாரை மேம்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, எனவே புதுச்சேரி அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் திருநள்ளார் கோயில் நகர மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

3. காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது, துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரியை மூடி வைத்தும், அவ்வப்போது நிலக்கரி மீது நீரை இறைத்து அதனால் ஏற்படும் வெப்பத்தை தணிக்க வேண்டும் என்ற உத்தரவையும், அதுபோல் நிலக்கரிகள் வெளியே அனுப்பும்போது அதனை மூடி வைத்து அனுப்ப வேண்டும் என்ற உத்தரவையும் மதிக்காமல் மார்க் துறைமுகம் செயல்படுவது கண்டிக்கத்தக்க செயலாகும், இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள்களுக்கு பல்வேறு இன்னல்களும், வியாதிகளும் வருவதாக அறிகிறோம். எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் நிலக்கரியை இறக்கி வைப்பது மற்றும் அதனை வெளியே அனுப்பும்போது அரசின் உத்தரவுகளை மார்க் துறைமுகம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்..

4. காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைப்புக்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும்.

5. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் பதவிகளில் முறையே I .A.S  மற்றும் I.P.S அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி PCS அதிகாரியை மாவட்ட ஆட்சியராக நியமித்திருப்பது தவறான செயலாகும். மேலும்,  தற்பொழுது காரைக்காலுக்கு I.P.S நிலையில் நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் காரைக்காலில் தங்கி பணிகளை செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவன்

(எம்.நெய்னா முஹம்மது)
மாவட்ட செயலாளர்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP