





காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் உள்ள அலிசா நகரில் சுமார் 75 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மரணம் அடையும் முஸ்லிம் சமுதாயத்தினரின் உடல்களை அடக்கம் செய்யும் மயானத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அங்கு அடக்கம் செய்பவர்களின் உடல்களை நாய்களும்,பன்றிகளும் வெளியில் இழுத்துபோட்டு குதறும் அவலநிலை நிலவி வந்தது. நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லைக்காக இப்பகுதியில் இறந்து போகும் முஸ்லிம் சமுதாயத்தினரின் உடல்களை அருகிலுள்ள தமிழக பகுதியான நாகூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, திருபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் கபருஷ்தானுக்கு சுற்று சுவர் கட்ட நிதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவல் அந்த மக்களிடம் வெளியிடப்பட்டது, இருந்தும் நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து வாஞ்சூர் கிளை தமுமுக நிர்வாகிகள் தமுமுக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.M.C. சிவகுமார், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தமுமுக சார்பாக சுற்று அமைக்ககோரி மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சென்ற 7.3.2012 அன்று வாஞ்சூர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மேல வாஞ்சூர் செய்யத் அலிஷா நகர் கபறுஸ்தான் கொல்லைக்கு சுற்று சுவர் அமைக்க வக்பு வாரியம் அனுமதி கொடுத்தும், அமைக்காமல் காலதப்படுத்தும் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகும் அரசு மெத்தனமாக இருந்ததால் சென்ற 28.1.2013 அன்று காரைக்கால்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சூரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்ட காலத்திற்கு வந்த திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தாமரைசெல்வன் சுற்று சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக மீண்டும் வாக்குறுதி அளித்தார்.
திருபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் கபருஷ்தானுக்கு சுற்று சுவர் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி கொடுக்காத காரணத்தால், தமுமுகவின் தொடர் முயற்சியால் மத்திய முன்னால் இணை அமைச்சர் நாராயணசாமி அவர்களின் நாடாளுமன்ற தொகுதி நிதியிளுருந்து ரூ.6,00,000/- நிதி பெறப்பட்டு தற்பொழுது கபறுஸ்தான் கொல்லைக்கு சுற்று சுவர்கட்டப்பட்டு விட்டது.
முஸ்லிம்களின் கபருஸ்தானுக்கு சுற்று சுவர் கட்ட நிதி ஒதுக்கிய மத்திய முன்னால் இணை அமைச்சர் நாராயணசாமி
அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் LSP சோழசிங்கராயர் அவர்களுக்கும், திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் தமுமுக சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.