அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, June 10, 2015

புதுச்சேரி அரசு, கல்வி துறை, Primary School Teacher 2015 பதவிக்கு இடஒதுக்கீடு முறையை அறிவிக்க வேண்டும்- புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

புதுச்சேரி அரசு, கல்வி துறை, Primary School Teacher 2015 பதவிக்கு இடஒதுக்கீடு முறையை அறிவிக்க வேண்டும்

புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

புதுச்சேரி அரசு, கல்வி துறை சார்பாக Primary School Teacher 2015 பதவிக்கு 425 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். application கொடுக்க கடைசி நாள் 17.06.2015 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் General பிரிவினருக்கு 217 இடங்களும், OBC பிரிவினருக்கு 140 இடங்களும், SC பிரிவினருக்கு 68 இடங்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் OBC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 217 இடங்களில் MBC, BCM, ECM, BT பிரிவினரும் அடங்குவர் என மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செயல் முறையற்ற செயலாகும்.

எனவே, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள இடஒதுக்கீடு முறையில் OBC, MBC, BCM (முஸ்லிம்), ECM, BT பிரிவினருக்கு எத்தனை இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை தனித்தனியாக அறிவித்து, முழுமையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, தேவையற்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP