காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதை போக்குவரத்திற்கு கொண்டுவர வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
காரைக்கால்
டூப்ளக்ஸ் வீதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிமெண்ட் சுவர்
எடுத்து அப்பாதை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது, இதனால் அவ்வழியாக
அலுவலகத்திற்கு மற்றும் அருகில் உள்ள பள்ளிகூடத்திற்கு செல்பவர்கள் சுற்றி
செல்கின்றனர். புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றம் செல்லும்
வழிகள் அனைத்தும் அடைக்கப்படாமல் போக்குவரத்திற்கு வழி வகுத்திருக்கும்
நிலையில் காரைக்காலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையை
மட்டும் தடையை ஏற்படுத்தி அங்கு காவல்துறையின் பழைய வாகனங்களை நிறுத்தி
வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்.
எனவே,
போக்குவரத்திற்காக அந்த பாதையை திறந்து விட வலியுறுத்தி மனிதநேய மக்கள்
கட்சி சார்பாக 11.11.2010 அன்று நடைபெற்ற நகராட்சியின் அவல நிலையை
கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு, தொடர்ச்சியாக
நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது, ஆனால், இதுவரை அந்த
பாதை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், 6.6.2015 அன்று புதுச்சேரியின்
புதிய தலைமை செயலர் காரைக்காலுக்கு வருகை தந்தபோது அந்த இடத்தில் இருந்த
காவல்துறையின் அனைத்து பழைய வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சாலை
போக்குவரத்திற்கு உள்ள பாதை போல் தலைமை செயலருக்கு காட்டப்பட்டுள்ளது.
