அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, July 22, 2015

காரைக்கால் மாவட்டம், நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி தெருமுனை பிரச்சாரம்

பத்திரிக்கை செய்தி

புதுச்சேரி ரெங்கசாமி அரசை கண்டித்தும், மத்திய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்கால் மாவட்டம், நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி தெருமுனை பிரச்சாரம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 21.7.2015 அன்று காரைக்காலில் உள்ள மமக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹாஜா மெய்தீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நியாஜ் அஹமது, மனிதநேய வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் அப்துல் நாசர், நகர செயலார் முஹம்மது சர்புதீன், நகர துணை செயலாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
-----------------------

1. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு செய்த மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரையும், அதுபோல் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையும் நான்கு வழி சாலை அமைக்கப்படும் என அறிவித்தவர் இடையில் உள்ள  புதுச்சேரி முதல் நாகூர் வரை உள்ள பகுதியை குறிப்பிடவில்லை. இச்செயல் புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்கும் செயலின் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆகவே, மத்திய அரசு சென்னை முதல் கன்னியாக்குமரி வரை செயல்படுத்தவுள்ள நான்கு வழி சாலையில் விடுபட்டுள்ள புதுச்சேரி முதல் நாகூர் வரை உள்ள சாலையும் இணைக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

2. காரைக்காலில் ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு நாகூர் வரை வரும் அனைத்து ரயில்களும் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டு காரைக்கால் பகுதி மக்களும் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் demu பாசஞ்சர் ரயில் மதியம் 2.15 மணிக்கு நாகூர் வந்து மீண்டும் மாலை 3 மணிக்கு நாகூரில் இருந்து திருச்சிக்கு புறப்படுகிறது. எனவே, மத்திய ரயில்வே துறை காரைக்கால் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மதியம் 2.15 மணிக்கு நாகூர் வரும் demu பாசஞ்சர் ரயிலை காரைக்கால் வரை நீட்டித்து தருமாறு மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

3. காரைக்கால் மாவட்டத்தை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் புதுச்சேரி ரெங்கசாமி அரசை கண்டித்தும், மத்திய பிஜேபி மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஆகஸ்ட் 8 ந் தேதி நிரவி-திருபட்டினம் தொகுதி முழுவதும் தெருமுனை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP