காரைக்காலில், புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை கோரி மனு செய்தவர்கள் மற்றும் புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்கியது சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை குடிமை பொருள் வழங்கல் துறை வெளியிட வேண்டும்
புதுச்சேரி அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை .
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது அவர்கள் புதுச்சேரி முதல் அமைச்சர் மற்றும் அரசு செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிக குறைந்த விலைகளில் வழங்குவதற்கும், குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் குறிப்பிட்டு அவர்களின் வயது மற்றும் உறவு முறைகளையும் குறிப்பிட்டு அந்த குடும்ப உணவு பங்கீட்டு அட்டை ஒரு குடியுரிமைக்கான ஆதாரமாகவும் விளங்கியது. அரசு துறைகளில் அனைத்து நடைமுறைகளுக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டையை கொண்டுவரக்கோரி அதன் மூலமே அரசின் சலுகைகளும், பொதுமக்களுக்கு தேவையான சலுகைளும் வழங்கப்பட்டு வந்தன. நாளடைவில் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளை மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அட்டைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மஞ்சள் நிற அட்டை வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும், சிவப்பு நிற அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2004 - 2005 ம் ஆண்டு வீடு வீடாக சென்று தகவல் சேகரித்து அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை வழங்கப்பட்டது, அப்படி வழங்கும்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பல குடும்பங்களுக்கு மஞ்சள் நிற அட்டை வழங்கப்பட்டுள்ளது, அதுபோல் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள பல குடும்பங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சிவப்பு நிற அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையிலேயே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையை அணுகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி உட்பட்ட பல்வேறு கட்சிகளும், நுகர்வோர் பாதுக்காப்பு குழுவும் அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வருவாய் துறையிடம் சான்றிதழ் பெற்று சிவப்பு அட்டை கோரி குடிமை பொருள் வழங்கல் துறையில் விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பை குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டது. விஷயம் தெரிந்த குடும்பத்தினர் வருவாய் துறையிடம் சான்றிதல் பெற்று சிவப்பு அட்டை கோரி மனு அளித்துள்ளனர். ஆனால், உண்மையிலேயே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், அன்றாடம் கூலி வேலை செய்பவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு உரிய செய்தி போய் சேராததால் அவர்களால் சிவப்பு அட்டையாக மாற்றகோரி மனு அளிக்க முடியவில்லை.
தற்பொழுது பல குடும்பத்தினர் தமிழகத்திலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு இடம் மாறி வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி மாநிலத்தில் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். அதுபோல் இடம் மாறி வருபவர்களுக்கும், தனிக்குடித்தனம் செல்பவர்களுக்கும் மிக முக்கியமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் பெற அவர்கள் வசிக்கும் முகவரியில் குடும்ப உணவு பங்கீட்டு அட்டை தேவைப்படுகிறது. மேலும், ஆதார் அட்டை பதிய, தேர்தல் அடையாள அட்டை பெற, வங்கி கணக்கு துவங்க, குடியுரிமை சான்றிதழ் பெற மற்றும் பல்வேறு விதமான உரிமை பெறவும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டை தேவைப்படுகிறது. குடும்ப உணவு பங்கீட்டு அட்டையை அரசு அலுவலகங்களில் ஆதாரமாக கோரக்கூடாது என அரசு அறிவிப்பு செய்தும், இன்றுவரை அரசு அலுவலகங்களில் குடும்ப உணவு பங்கீட்டு அட்டையைத்தான் ஆதாரமாக கோருகின்றனர்.
எனவே, மேற்கண்ட பல்வேறு தேவைகளுக்காகவும் தமிழகத்திலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு இடம் மாறி வந்தவர்கள் அவர்கள் வசித்த ஊரில் நீக்கல் சான்றிதழ் பெற்று வந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலேயே வசித்து வரும் குடும்பத்தினர் தனிக்குடித்தனம் சென்றவர்கள் புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை கோரி காரைக்காலில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறையில் மனு அளித்து வருகின்றனர். சமீபத்தில் புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டைக்கு உரிய உணவு பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால், புதிய அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது, அதன்பிறகு அட்டைக்கு பொருட்கள் வேண்டாம் என்று எழுதி கொடுப்பவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன்படி பொருட்கள் வேண்டாம் என எழுதி கொடுத்து அட்டை வாங்கிய காரைக்கால் பகுதியில் உள்ள 1000 அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க சமீபத்தில் புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் அந்த 1000 அட்டைகளுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் அவர்கள் வசித்த ஊரில் நீக்கல் சான்றிதழ் பெற்று வந்தும், காரைக்காலில் வசித்து தனிக்குடித்தனம் சென்றவர்களும் புதிய தனி குடும்ப உணவு பங்கீட்டு அட்டை கோரி மனு செய்தும் இதுவரை அவர்களுக்கு புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்கப்படாமல் காலந்தாழ்த்தி வருகிறது குடிமை பொருள் வழங்கல் துறை. இதனிடையே மனு கொடுத்தவர்களின் மனு மூப்பு அடிப்படையில் அட்டை வழங்காமல் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் மற்றும் கவனிப்பு முறையில் புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனால், புதிய குடும்பத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், ஆதார் அட்டை பதியவும், தேர்தல் அடையாள அட்டை பெறவும், வங்கி கணக்கு துவங்கவும், குடியுரிமை சான்றிதழ் பெறவும் மற்றும் பல்வேறு விதமான உரிமை பெறவும் முடியாமல் அந்த குடும்பங்கள் கஷ்டப்படுகின்றனர்.
ஆகவே, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவாய் துறையிடம் சான்றிதழ் பெற்று சிவப்பு அட்டை கோரி குடிமை பொருள் வழங்கல் துறையில் விண்ணப்பித்த தகுதியான குடும்பத்திற்கு சிவப்பு அட்டை வழங்கவும், உண்மையிலேயே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மஞ்சள் அட்டையை சிவப்பு அட்டையாக மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புதிய குடும்ப உணவு பங்கீட்டு கோரி மனு செய்த தமிழகத்தில் வசித்த ஊரில் இருந்து நீக்கல் சான்றிதழ் பெற்று தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு குடிபெயர்ந்து வந்தவர்களுக்கும், காரைக்காலில் வசித்து தனிக்குடித்தனம் சென்றவர்களுக்கும் புதிய தனி குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்க வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் காரைக்காலில், புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை கோரி மனு செய்தவர்கள் மற்றும் புதிய குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்கியது சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை குடிமை பொருள் வழங்கல் துறை வெளியிட வேண்டுமெனவும் கேட்டு கொள்கிறோம்.